போதைமருந்து கடத்தலில் 'அம்மா' அணிச் செயலாளர் !

போதை மருந்து கடத்தல் கும்பலின் நடமாட்டம் குறித்த தகவலையடுத்து வேலூர்-காஞ்சிபுரம்  மாவட்ட போலீசார், நேற்றிரவு மாவட்ட எல்லையில்  தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.  அப்போது சுங்குவார்சத்திரம் பகுதியில் கடத்தல் கும்பல் போலீசாரிடம்  சிக்கியது. போலீசார்  விசாரிக்க ஆரம்பித்ததுமே அந்த கும்பல் "நாங்கள் யார் தெரியுமா?" என்ற ரீதியில்  போலீசாரிடம் எகிறத் தொடங்கியிருக்கிறது. போலீசார் விசாரணையை கடுமையாக்கவே, மேலும் மூன்று பேர் என  மொத்தம் ஆறுபேர் சிக்கியுள்ளனர்.

ADMK AMMA faction


ஸ்டீபன் சக்ரவர்த்தி, கணேஷ், ஹாஜிமுகமது,  சதீஷ் என்கிற மணி, ஏ.நாகராஜ், கணேஷ் என்கிற கட்டத்தொட்டி கணேஷ் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.  இவர்கள் அனைவருமே ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்தவர்கள். அதில் ஏ.நாகராஜ் என்பவர் அ.தி.மு.க. 38-வது வட்டக் கழகச் செயலாளராக இருக்கிறார். கணேஷ் என்கிற கட்டத் தொட்டி கணேஷ், அ.தி.மு.க.வின் வட்ட நிர்வாகியாக இருக்கிறார்.


ஆர்.கே. நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக,  இந்த நாகராஜ்தான் போலீசாரிடம் சிக்கியவர்.  டி.டி.வி. தினகரனுக்காக தேர்தல் வேலை பார்த்த இந்த நாகராஜின் நெட்வொர்க்தான் கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களை  பாதுகாப்பதிலும் ஈடுபட்டது என்கிறார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!