வெளியிடப்பட்ட நேரம்: 20:08 (09/05/2017)

கடைசி தொடர்பு:20:08 (09/05/2017)

தமிழ் அறிஞர்களுக்கான செம்மொழி விருது - குடியரசுத் தலைவர் வழங்கினார்..!

2013-2014, 2014-2015, 2015-2016-ம் ஆண்டுகளுக்கான தொல்காப்பியர் விருது மற்றும் இளம் அறிஞர்களுக்கான விருதினை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார். செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் சார்பில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. 


செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் தொல்காப்பியர் விருது மற்றும் இளம் அறிஞர்களுக்கான விருதுகளை ஆண்டு தோறும் வழங்கி வருகிறது. தமிழ் மொழியை வளர்க்கவும், தமிழ் அறிஞர்களை பெருமைப்படுத்தவும் இந்த விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்த மூன்று வருடங்களுக்கான விருதுகள், இந்த ஆண்டு மொத்தமாக வழங்கப்பட்டது.

2013-2014-ம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது முனைவர் சோ.ந.கந்தசாமிக்கும், 2014-2015-ம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது முனைவர் தட்சணாமூர்த்திக்கும், 2015-2016-ம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது கலைக்கோவனுக்கும் வழங்கப்பட்டது. மேலும் முனைவர்கள் பாலசுப்ரமணியன், சாலாவாணி உள்பட 15 பேருக்கு இளம் அறிஞர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. வருடத்துக்கு ஆறு பேர் வீதம் 18 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதுகளை ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.