சென்னையில் மழை..! மக்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக, அக்னி நட்சத்திரம் துவங்கிய பிறகு, தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் 100 ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் சுட்டெறித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.


முக்கியமாக, சம்மர் சீசனில், குழந்தைகளுடன் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே, முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Rain Chennai

இதற்கிடையே சென்னையில் இன்று மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று வெதர்மேன் கூறி இருந்தார். ஆனால், காலை முதலே கடுமையான வெயில் வாட்டி வதைத்தது.

Rain Chennai


இதையடுத்து, மாலை 7 மணிக்குப் பிறகு, இடி, மின்னல் வந்து சென்றது. இந்த நிலையில், தற்போது சென்னையில் அண்ணாசாலை, கோயம்பேடு, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, அடையார், திருவான்மியூர், வேளச்சேரி, தரமணி, மயிலாப்பூர், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துவருகிறது. நீண்ட நாள்களுக்குப் பிறகு மழை பெய்வதால், சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


அதேபோல புதுச்சேரி, திருவள்ளூர், கடலூர், கூவாகம், திண்டுக்கல் உட்பட, தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!