திடீர் சூறாவளியால் சரிந்த ஒரு லட்சம் வாழைகள்..!

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களிலுள்ள கால்வாய், தாதன்குளம், வல்லக்குளம், கருங்குளம் ஆகிய 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கதலி, நாடான், கற்பூரவல்லி, சக்கை, நேந்திரன் மற்றும் ரஸ்தாலி ஆகிய ஆறு வகையான வாழைகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.  இந்தப் பகுதி விவசாயிகளுக்கு முக்கிய விவசாயமே வாழைதான். 

storm

மருதூர் அணை, மேலக்கால் மூலமாக பாசனம் பெற்றுவந்த நிலையில், இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால், ஆழ்துளைக் கிணறுகள்மூலமும், லாரிகள் மூலமும் தண்ணீரை விலைக்கு வாங்கிப்  பயிர்செய்துவந்தனர். 

தற்போது, வாழைகள் குலைதள்ளியுள்ளன. அறுவடைக்கு இன்னும்  இரண்டு மாதங்களே உள்ள நிலையில், ஒரு குலை வாழையை     ரூ.200 முதல் ரூ.400 வரை வெளியூர் வாழை வியாபாரிகளிடமும், வாழை கமிஷன் மார்க்கெட்டிலும் விலை பேசி, வாழைகள் சாய்ந்துவிடக்கூடாது என்பதற்காக கம்புகளால் தாங்கலும் கொடுத்திருந்தனர். இன்று அதிகாலை, திடீரென வீசிய சூறைக்காற்றால் சுமார் 1 லட்சம் வாழைகள் சரிந்து சேதமாயின. 

அறுவடை நிலையை எட்டிய  வாழைகள் சரியான முதிர்ச்சி இல்லாமலே சரிந்ததால், பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தப் பகுதி விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!