Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2,000 டாஸ்மாக் கடைகளைத் திறக்க முடியவில்லை! நீதிபதி கிருபாகரன் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு

'சாலையோரம் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்கக்கூடாது' என்ற உத்தரவுக்கு எதிராக, தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. 


டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகப் போராடுபவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்துகின்றனர் என்று திருப்பூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் நீதிபதி கிருபாகரன் அடங்கிய அமர்வு, டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அந்தப் பகுதியில் டாஸ்மாக் கடைகள் அமைக்கக்கூடாது என்றும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகப் போராடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக அரசு சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் மனுவைத் தாக்கல்செய்துள்ளார். அந்த மனுவில், 'கிராம சபையால் தீர்மானம் வழங்கப்பட்டால் டாஸ்மாக் கடைகள் திறக்கக்கூடாது என்ற உத்தரவுக்குத் தடைவிதிக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகப் போராடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்ற உத்தரவுக்குத் தடைவிதிக்க வேண்டும். மேற்கண்ட உத்தரவுகளால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளைத் திறக்க முடியாத சூழல் உள்ளது' என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து நாளை உயர்நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement