Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டி.டி.வி.தினகரன் கைது! அமலாக்கத்துறைக்கு அரைமணி நேரம் கெடு விதித்த நீதிபதி

'டி.டி.வி.தினகரன் கைதானதுகுறித்த தகவலை அரை மணி நேரத்தில் தெரிவிக்க வேண்டும்' என்று அமலாக்கத்துறைக்கு சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

1995, 1996-ம் ஆண்டுகளில் டி.டி.வி.தினகரனின் வங்கிக் கணக்குகளில் வெளிநாட்டிலிருந்து பெரும் தொகை டெபாசிட் செய்யப்பட்டது. இதையடுத்து அவர்மீது அந்நியச் செலாவணி மோசடி வழக்கை அமலாக்கத்துறை பதிவுசெய்தது. தினகரனுக்கு 28 கோடி ரூபாய் அபராதம் விதித்தது அமலாக்கத்துறை. இந்த வழக்கு, சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த வழக்கில் டி.டி.வி.தினகரன் கைதுசெய்யப்பட்ட விவரத்தைத் தெரிவிக்குமாறு அமலாக்கத்துறைக்கு ஏற்கெனவே நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

வழக்கு, எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தினகரன் கைதுகுறித்த விவரத்தைத் தெரிவிக்க மூன்று வாரம் அவகாசம் தந்தும் பதில் தராதது ஏன் என அமலாக்கத்துறைக்குக் கண்டனம் தெரிவித்த நீதிபதி, 'தினகரன் கைதானதுகுறித்த தகவலை அரை மணி நேரத்தில் தெரிவிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டார். 

இதையடுத்து, வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தினகரன் கைது விவரம்குறித்த தகவலைத் தெரிவிக்க அவகாசம் கேட்டார். மே 12ஆம் தேதி வரை அவகாசம் அளித்த நீதிபதி, அன்றைய தினம் தினகரன் கைதுகுறித்த முழு விவரத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, சசிகலாவின் உறவினர் பாஸ்கரன் இன்று ஆஜரானார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close