ஆசிரியை மீது கார் ஏற்றிக் கொன்ற தீயணைப்பு வீரர் புழல் சிறையில் தற்கொலை?

சென்னையில், பள்ளி ஆசிரியை கொலை வழக்கில் கைதான தீயணைப்புப்படை வீரர் இளையராஜா, சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

chennai teacher murder
 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை நிவேதிதா. இவருக்கு இரண்டு குழந்தைகள். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் இளையராஜாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த வாரம் காரில் சென்னைக்கு வந்தனர். சென்னையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்தனர். 

இந்நிலையில் நேற்று முன் தினம் நிவேதிதாவை வேறொரு ஆண் நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்ததைப் பார்த்து ஆத்திரமடைந்த இளையராஜா, காரில் துரத்திச்சென்று அவர்கள் மீது மோதியுள்ளார். அதில் நிவேதிதா இறந்துவிட்டார். அவருடன் வந்த ஆண் நண்பர் சிகிச்சைபெற்றுவருகிறார். அண்ணாநகர் காவல்துறையினர் இளையராஜா மீது வழக்குப்பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர். 

புழல் சிறையில் அடைக்கப்பட்ட இளையராஜா இன்று சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார்.  கழிவறை ஜன்னலில் கைலியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!