Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மின்னல் தாக்கி உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கு ரூ.12 லட்சம் நிவாரணம்! முதல்வர் அறிவிப்பு

இடி, மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 12 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,' மதுரை மாவட்டம்,  அகத்தாபட்டி கிராமத்தில், 9.5.2017 அன்று இடி மின்னலுடன் கூடிய மழையின் காரணமாக, மின் கம்பி திடீரென அறுந்து விழுந்ததில், விளையாடிக் கொண்டிருந்த பொன்பாண்டி என்பவரின் மகன் சுரேஷ், சுவாமிமல்லம்பட்டி கிராமத்தில் பெய்த இடிமின்னலுடன் கூடிய மழையில், இடி விழுந்ததில், மலைச்சாமி என்பவரின் மகள் சூரம்மாள், புளியம்பட்டி சாலையில், கூலி வேலைக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் ரங்கசாமி என்பவரின் மகன் சங்கர்ராஜ் ஆகிய மூன்று நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இடிமின்னல் மழையின் காரணமாக உயிரிழந்த இந்த 3 பேர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க  உத்தரவிட்டுள்ளேன்' என தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close