வெளியிடப்பட்ட நேரம்: 17:34 (10/05/2017)

கடைசி தொடர்பு:17:26 (10/05/2017)

ஊரக வளர்ச்சித் துறையில் நடமாடும் ஆய்வக வாகனங்கள்!

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் திட்டப்பணிகளின் தரத்தை ஆய்வு செய்ய ஐந்து நடமாடும் தரக்கட்டுப்பாட்டு ஆய்வக வாகனங்களை கொடியசைத்து தொடக்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி.

tn

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆண்டுக்கு 20,000 கோடியளவில் பல்வேறு மாநில மற்றும் மத்திய அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக, தொலைதூரப் பகுதிகளில் மேற்கொள்ளும் பணிகளையும் தரக்கட்டுப்பாடு இணைப்பில் கொண்டுவர, தரக்கட்டுப்பாடு செயலாக்கத்தை மேலும் மேம்படுத்தும் பொருட்டு, ஊரக வளர்ச்சித்துறை மூலம் ஐந்து நடமாடும் தரக்கட்டுப்பாட்டு ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

eps

இதன் மூலம் மாவட்டங்களில் நடைபெறும் திட்டப் பணிகளின் தர ஆய்வை மேற்கொள்ள இந்த நடமாடும் தரக்கட்டுப்பாட்டு ஆய்வகங்களில் உள்ள 20-க்கும் மேற்பட்ட தரக்கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் உபகரணங்களைக் கொண்டு பணியிடத்திலேயே 15 வகையான ஆய்வுகளை மேற்கொள்ள முடியும். மேலும், ஆய்வு முடிவுகளை இணைய வழி திட்ட கண்காணிப்பு முறையில் பதிவேற்றம் செய்யும் அமைப்புகள் இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளன.