வறண்டது ஏரி... வெளியேறும் முதலைகள்..! அச்சத்தில் கிராம மக்கள் | Crocodiles comes of out of lake due to no water

வெளியிடப்பட்ட நேரம்: 17:47 (10/05/2017)

கடைசி தொடர்பு:17:47 (10/05/2017)

வறண்டது ஏரி... வெளியேறும் முதலைகள்..! அச்சத்தில் கிராம மக்கள்

சிதம்பரத்தில் உள்ள வக்ரமாரி ஏரி வறண்டு விட்டதால் அங்குள்ள முதலைகள் வெளியேறி கிராம பகுதியில் படுத்துக் கிடக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

முதலை

சிதம்பரத்தில் அமைந்திருக்கும் கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் இருக்கும் முதலைகளை வனத்துறையினர் பிடித்துவந்து வக்ரமாரி ஏரியில் விடுவது வழக்கம். கொள்ளிடம் ஆற்றில் இருந்து மக்கள் வசிக்கும் பகுதிகளில் முதலைகள் புகுந்து விடுவதால், பாதுகாப்பு நடவடிக்கையாக வனத்துறையினர் முதலைகளை ஏரியில் விட்டு செல்வார்கள்.  இதனிடையே வக்ரமாரி ஏரி வறண்டு விட்டதால் அங்குள்ள முதலைகள் கிராம பகுதியில் காணப்படுகின்றன.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில்,'இந்த பகுதியில் முதலைகள் பண்ணை அமைக்கவேண்டும் என நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், அரசுத் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், ஏரியில் இருக்கும் முதலைகள் வெளியேறி முட்புதர்களிலும் மக்கள் வசிக்கும் பகுதியிலும் படுத்துக் கிடப்பதால் பலரும் அச்சமடைந்திருக்கிறார்கள்" என்று கூறியுள்ளனர். பிச்சாவரத்தின் அருகில் இருக்கும் இப்பகுதியில் முதலைகள் பண்ணை அமைக்கப்பட்டால் இங்கு புதிய சுற்றுலாத்தளம் உருவாகும் என கிராம மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
 


அதிகம் படித்தவை