எஸ்.எம்.எஸ் மூலம் பெற்றோருக்கு பிளஸ் 2 ரிசல்ட்! அசத்தப்போகும் தமிழக அரசு

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் செல்போனில் குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

+2

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (12.5.17) வெளியாகிறது. தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இத்தேர்வை எழுதியுள்ளனர். பொதுவாக பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அரசு  இணைதளங்களில் வெளியிடப்படுவது வழக்கம். இதனிடையே எஸ்.எம்.எஸ் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ' இந்தாண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகளை மாணவர்களின் பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக' கூறினார். தேர்வு முடிவுகள் வெளியான 10 நிமிடங்களில் குறுஞ்செய்தியில் மதிப்பெண்களை அறியலாம் எனவும் அவர் கூறினார். மேலும் சான்றிதழில் மாணவர்கள் பெயர் தமிழிலும் குறிப்பிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. விடுமுறை நாளில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!