வெளியிடப்பட்ட நேரம்: 22:31 (10/05/2017)

கடைசி தொடர்பு:11:32 (11/05/2017)

சென்னையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் - காவல் துறையினர் மோதல்!

சென்னை புரசைவாக்கத்தில் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல் உருவாகியுள்ளதால், அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

police

சென்னை புரசைவாக்கம் சட்டக் கல்லூரி விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, போக்குவரத்துக் காவலர்கள் ஒரு வழிப்பாதையில் வந்ததாகக் கூறி விசாரித்தனர். இதையடுத்து, மாணவர்களுக்கும் காவலர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், சில மாணவர்கள் காவல் துறையினருக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அங்கு இரு தரப்பினருக்கும் மோதல் உருவாகியுள்ளது.

இதையடுத்து, மாணவர்கள் மற்றும்  காவல்துறையினர் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், விசாரணை நடத்த வந்த காவல்துறையின் உயரதிகாரி ஒருவர் தாக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. மேலும், மாணவர்கள் கல் வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.