வெளியிடப்பட்ட நேரம்: 09:34 (11/05/2017)

கடைசி தொடர்பு:10:26 (11/05/2017)

தாட்கோ கடனை வசூலிக்க திருச்சி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள அசத்தல் சலுகை!

திருச்சி மாவட்டத்தில், தாட்கோ மூலமாகக் கடன் வாங்கி, கடன் தொகையைச் செலுத்தாமல் நிலுவையிலுள்ள அசல் மற்றும் வட்டித் தொகையை மூன்று அல்லது ஒரே தவணையில் செலுத்தினால், அபராதத்தொகை தள்ளுபடிசெய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Bank


இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திருச்சி மாவட்டத்தில்,  தாட்கோமூலம் தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சிக் கழகம் (NSFDC)  மற்றும் தேசிய துப்புரவுத் தொழிலாளர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகம் (NSKFDC) திட்டங்களின் கீழ் கடன் பெற்றவர்களுக்கு, கடனைத் திருப்பிச் செலுத்த ஒரு சிறப்புச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. கடன் தொகை செலுத்தாமல், நிலுவையிலுள்ள அசல் மற்றும் வட்டித் தொகையை ஒரு தவணையிலோ அல்லது மூன்று தவணைகளிலோ செலுத்தும் பயனாளிகளுக்கு, அவர்கள் செலுத்தவேண்டிய அபராத வட்டித் தொகையை நேர் செய்யும் விதமாகத் தள்ளுபடிசெய்ய, தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  மேற்கண்ட திட்டங்களின் கீழ் கடன் பெற்ற பயனாளிகள், தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள இந்தச் சலுகையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், இந்தச் சலுகை குறிப்பிட்ட சிறிது காலம் மட்டுமே நடைமுறையில் இருக்கும். 

 இதுகுறித்து மேலும் தகவல் தெரிந்துகொள்ள, மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, இராஜா காலனி, திருச்சிராப்பள்ளி – 1 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 0431 – 2463969 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க