Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கொலை செய்து தலையை போலீஸ் ஸ்டேஷனில் வீசிச் சென்ற கொடூரம்! காவலர்களை அதிரவைத்த மர்ம நபர்கள்

கடலூர் மாவட்டம், ரெட்டிச்சாவடி காவல் நிலைய வாசலில் மர்ம நபர்கள் சிலர் ஒருவரைக் கொலைசெய்து  தலையை காவல் நிலையத்தினுள் வீசிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளகிய மனதுடையவர்கள் இந்த வீடியோவைப் பார்க்க வேண்டாம்.

 

 

 

ஒரு கொலை வழக்கில் கைதாகி, சிறைவைக்கப்பட்டுள்ள, புதுச்சேரி மாநிலம், பாகூரைச் சேர்ந்த சுவேதன் (17) தற்போது ஜாமீனில் வந்துள்ளார். இந்நிலையில், அடையாளம் தெரியாத சிலர் அவரை பாகூரில் உள்ள ஏரிக்கரையில் கொலை செய்து, உடலை அங்கேயே போட்டுவிட்டு தலையை டூவிலரில் கொண்டுவந்து ரெட்டிச்சாவடி காவல் நிலைய வாசலில் தூக்கி எறிந்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டனர்.
தற்போது, கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  விஜயகுமார் தலைமையில் தீவிர விசாரணை செய்துவருகின்றனர்.

 

 

 



புதுச்சேரி போலீஸாரும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். சுவேதனின் உடல் கதிர்காமம் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement