Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'நான் எங்கும் தப்பிச் செல்லவில்லை'- உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கர்ணன் புதிய மனு

'நீதிபதி கர்ணன் சென்னையில் உள்ளார். அவர் எங்கும் தப்பிச் செல்லவில்லை' என்று கர்ணன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கர்ணன்


கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக ஆறு மாதம் சிறைத்தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கொல்கத்தா காவல்துறையினர், தமிழக காவல்துறையினரின் உதவியுடன் நீதிபதி கர்ணனைத் தேடி வருகின்றனர். இருப்பினும், இதுவரை கர்ணன் இருக்கும் இடத்தை காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், கைது உத்தரவைத் திரும்பப் பெறக் கோரி, நீதிபதி கர்ணன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், 'நீதிபதி கர்ணன் சென்னையில்தான் உள்ளார். அவர் எங்கும் தப்பிச் செல்லவில்லை. நீதிபதிகள் உத்தரவு தொடர்பாக குடியரசுத் தலைவரை சந்திக்க உள்ளார். அவருக்கு வழங்கப்பட்ட ஆறு மாத சிறை உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்' என்று  குறிப்பிடப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement