Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நீட் தேர்வு விவகாரம்: சென்னை சிபிஎஸ்இ அலுவலகம்மீது மாணவர்கள் கல்வீசித் தாக்குதல்!

நீட் தேர்வைக் கண்டித்து, தேர்வு எழுதிய மாணவர்கள் சென்னை சிபிஎஸ்இ அலுவலகம்மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.

நீட் தேர்வு எதிர்ப்பு


கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்த நீட் தேர்வில் மாணவர்களைக் கையாண்ட விதத்தைக் கண்டித்து, சென்னை அண்ணா நகரில் உள்ள சிபிஎஸ்இ அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டனர். நீட் தேர்வில் பங்குபெற்ற மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடத்திய முற்றுகைப் போராட்டத்தில், சிபிஎஸ்இ அலுவலகம்மீது கல்வீசித் தாக்கியுள்ளனர்.

நீட் தேர்வு அறையில் பொதுச் சோதனை என்ற பெயரில், மாணவர்களை மோசமான முறையில் தேர்வர்கள் கையாண்டார்கள் என மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பல சர்ச்சைகள் நிறைந்த நீட் தேர்வை, தமிழகத்தில் ரத்துசெய்யவேண்டுமென இந்திய மாணவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement