வெளியிடப்பட்ட நேரம்: 15:11 (11/05/2017)

கடைசி தொடர்பு:16:38 (11/05/2017)

மெரினாவை பறவைகள் தேடிவரக் காரணம் தெரியுமா?

தினமும் காலையில் மெரினா கடற்கரைப் பக்கம் போனா கூட்டம் கூட்டமா புறாக்களும் காகங்களும் நெறஞ்சு இருக்கும். அங்கதான் தினமும் வாக்கிங் போறோம், ஜாகிங் போறோம்... எப்போதாவது இத யோசிச்சிருக்கீங்களா, கடற்கரைக்கு எதுக்கு தினமும் அவ்வளவு புறாக்கள் வருதுன்னு.

 

மெரினா கடற்கரைக்கு ஒரு தன்னார்வக் குழுவினர் தினமும் காலையில் முதல் ஆளா வந்துடுறாங்க. இவுங்களுக்கு என்ன வேலை தெரியுமா? பறவைகளுக்காகவே தானியங்கள் எடுத்துட்டு வந்து கடற்கரை மணல் முழுக்கத் தூவுறாங்க.  அதோடு இல்லாம, வெளுத்துவாங்குற வெயில் காலத்தை பறவைகளும் சமாளிக்க மணல் பரப்புல குழி வெட்டி பேப்பர் தொட்டி வச்சு தண்ணீரும் வைக்கிறாங்க. 


‘யார் இந்தக் குழு? எதுக்கு இப்படிப் பண்றாங்க?’ இந்தக் கேள்விகளைவிட முக்கியமான விஷயம் எது தெரியுமா? அக்னி நட்சத்திரத்தை சமாளிக்க முடியாமல் ஆறறிவுள்ள மனிதனே இவ்வளவு கொடுமைய அனுபவிக்கும்போது பறவைகளும் விலங்குகளும் என்ன செய்யும்? அதுக்காக நீங்களும் தினமும் மெரினா வரணும்னு அவசியமில்ல. இந்தத் தன்னார்வலர்கள் சொல்ற மாதிரி நம்ம ஒவ்வொருத்தரோட வீட்டிலும் பறவைகளும், நாய், பூனை போன்ற விலங்குகளும் தண்ணீர் குடிக்கவாவது சின்ன தண்ணித்தொட்டியோ, பாத்திரமோ வச்சாலே போதும்! என்ன, தயாரா மக்களே?!