போலீஸ் வேலைக்கு குவிந்த திருநங்கைகள் விண்ணப்பம்! தமிழகத்தில் இது முதன்முறை | Transgenders eager to join TN Police 

வெளியிடப்பட்ட நேரம்: 16:21 (11/05/2017)

கடைசி தொடர்பு:16:20 (11/05/2017)

போலீஸ் வேலைக்கு குவிந்த திருநங்கைகள் விண்ணப்பம்! தமிழகத்தில் இது முதன்முறை

தமிழ்நாடு காவல்துறையில் கான்ஸ்டபிள்கள், தீயணைப்பு வீரர்கள், ஜெயில் வார்டன்கள் ஆகிய வேலைகளுக்கான எழுத்து தேர்வுக்கு, இம்முறை திருநங்கைகளிடம் இருந்து அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் தெரிவித்துள்ளது.

transgenders
 

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் 13,137 இரண்டாம் நிலை காவலர்கள், 1,015 இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள் மற்றும் 1,512 தீயணைப்போர் பதவிகளுக்குரிய பொதுத் தேர்வுக்கான அறிவிக்கையினை வெளியிட்டது. இத்தேர்வுக்கு 6.32 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதற்கு முன்னர்  2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பொதுத்தேர்வுக்கு  2.71 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. இத்தேர்விற்கு சென்னை, மதுரை, வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், சேலம் ஆகிய மாவட்டங்களிலிருந்து விண்ணப்பங்கள் அதிக அளவில் பெறப்பட்டுள்ளன.

இத்தேர்வில் முதன் முறையாக திருநங்கைகள் மூன்றாம் பாலினப் பிரிவில் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே இம்முறை 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இவ்வளவு திருநங்கைகள் போலீஸ் தேர்வுக்கு விண்ணப்பிப்பது இதுவே முதல்முறை. இத்தேர்வுக்கான எழுத்துத் தேர்வு வரும் 21-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)  சென்னை உட்பட 32 மாவட்டங்களிலுள்ள  410 தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது.

எழுத்துத் தேர்வில் கலந்துகொள்வதற்குரிய தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை விண்ணப்பதாரர்கள் http://www.tnusrbonline.org/ என்ற இணையதளத்தில்  இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தமது OMR விண்ணப்ப எண், பெயர் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க