Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அதிகாரி வைத்த லஞ்ச குற்றச்சாட்டு: அமைச்சர் சரோஜாவின் பதில் இதுதான்..!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தருமபுரி மாவட்ட குழந்தைகள் நல அலுவலராக நியமிக்கப்பட்டவர் ராஜமீனாட்சி. ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள தன்னை நிரந்தரமாகப் பணியில் அமர்ந்த சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா, 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார் ராஜமீனாட்சி.

Minister Saroja

இந்தநிலையில், சென்னை காவல்துறை ஆணையர் கரண்சின்காவை இன்று நேரில் சந்தித்து அமைச்சர் சரோஜா மீது ராஜமீனாட்சி லஞ்சப் புகார் கூறினார். 


இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வேலை வழங்க அமைச்சர் சரோஜா என்னிடம் லஞ்சம் கேட்டார். அமைச்சர் சரோஜா லஞ்சம் வாங்கியது குறித்த வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் என்னிடமுள்ளன. சமூகநலத்துறையில் லஞ்சம் தலைவிரித்தாடினால் பெண்களுக்குப் பாதுகாப்பு எப்படி இருக்கும். தனது புகாரை லஞ்ச ஒழிப்புப் போலீஸுக்கு மாற்றுவதாக ஆணையர் கூறினார். முதல்வரைச் சந்தித்து அமைச்சர் மீது புகார் அளிக்க முயன்றேன்" என்று கூறினார்.


அமைச்சர் சரோஜா மீதான இந்தப் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சரோஜா, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். இதற்காக அ.தி.மு.க அலுவலகம் வந்த சரோஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், "என் மீதான குற்றச்சாட்டு குறித்து விரைவில் அறிக்கை வெளியிடுவேன்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement