Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராம்கோ நிறுவன அதிபர் பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா காலமானார்..!

ramco

ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனத்தின் அதிபர் பி.ஆர்.ராமசுப்பிரமணியராஜா காலமானார். அவருக்கு வயது 82. கடந்த சில தினங்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்று மாலை ராஜபாளையத்திலுள்ள அவரது இல்லத்தில் காலமானார். ராமசுப்பிரமணிய ராஜாவுக்கு மனைவி சுதர்சனம், வெங்கட சுப்பிரமணிய ராஜா என்ற மகனும் உள்ளனர். 

ராஜபாளையம் பகுதியில் பெரும் செல்வாக்கோடு வாழ்ந்து வந்த இவர், தமிழகத்தின் முக்கிய தொழிலதிபர் ஆவார். இந்திய அளவிலும் சிமென்ட்ஸ் தொழிலில் கொடிகட்டிப் பறந்தவர் ராமசுப்பிரமணிய ராஜா. ராஜபாளையம் பகுதி மக்களிடம் மிகவும் மதிப்பு மிக்கவர். அவரது உடல் ராஜபாளையத்திலுள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ராம்கோ சிமென்ட்ஸ் மற்றும் நூற்பாலை நிர்வாகங்களை அவரது மகன் வெங்கட சுப்பிரமணிய ராஜா தற்போது கவனித்து வருகிறார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close