இன்னும் சற்று நேரத்தில் +2  தேர்வு முடிவுகள்...பெற்றோர்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது என்ன?

இன்று,  பிளஸ் 2  தேர்வு முடிவுகள் வெளியாகிறது. www.tnresults.nic.in www.dge1.tn.nic.in www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளைக் காணலாம். 

plus 2
 

தமிழகத்தில், இந்தாண்டு +2 தேர்வை 9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தபடி, பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்றும், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 19ஆம் தேதியும் வெளியாகவுள்ளன.

இந்தாண்டு முதல் பொதுத் தேர்வுகளுக்கு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களின் தர வரிசைப் பட்டியலை வெளியிடும் முறையைத் தமிழக அரசு ரத்துசெய்துள்ளது. எனவே, மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படாது. 

இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய செங்கோட்டையன், 'ரேங்கிங் எனப்படும் தரவரிசைப் பட்டியல், மாணவர்களிடையே உளவியல்ரீதியாக மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இதைத் தடுக்கவே  இந்த நடவடிக்கையை மேற்கொண்டோம்.மேலும் 11ஆம் வகுப்புக்கும் பொதுத் தேர்வை நடத்த ஆலோசனை செய்துவருகிறோம்' என்றார்.

 குறைந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் மனச்சோர்வடைந்து, தவறான முடிவுகள் எடுக்காமல் இருக்க, 104 என்ற இலவச தொலைபேசி சேவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த எண்ணுக்கு போன் செய்து, ஆலோசனைகள் பெறலாம். எனவே, குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் மன அழுத்தத்துக்கு ஆளாகும் பிள்ளைகளின் பெற்றோர், 104 என்ற இலவச எண்ணுக்கு போன் செய்து, பிள்ளைகளுக்குக் கவுன்சிலிங் வழங்க வழிவகுக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!