Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

30 லட்சம் ரூபாய் லஞ்சப் புகார்குறித்து வாய்திறக்காத அமைச்சர் சரோஜா!

30 லட்சம் ரூபாய் லஞ்சப் புகார் கூறப்பட்டுள்ள நிலையில், செய்தியாளர்களை இன்று சந்தித்த அமைச்சர் சரோஜா, இந்தப் புகார்குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

Minister Saroja
 

சமூக நலத்துறை அமைச்சராக இருக்கும் சரோஜா மீது தருமபுரி மாவட்ட குழந்தைகள் நலத்துறை அலுவலர் ராஜமீனாட்சி, நேற்று சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள தன்னை, நிரந்தரமாக பணியில் அமர்த்த, அமைச்சர் சரோஜா 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.  மேலும், அமைச்சர் சரோஜா லஞ்சம் வாங்கியதுகுறித்த வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் ராஜமீனாட்சி தெரிவித்தார். 

அமைச்சர் சரோஜா மீதான இந்தக் குற்றச்சாட்டு, தமிழகம் முழுவதும்  அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகுறித்து விரைவில் அறிக்கை வெளியிடுவேன் என்று சரோஜா நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த சரோஜா, ‘தமிழகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த அனைத்து திட்டங்களும் இந்தியாவுக்கே முன்னோடியாகத் திகழ்கிறது. மாற்றுத்திறனாளிகளின் நலன் காப்பதில் தமிழகம் முன்னிலையில் இருக்கிறது’, என்றார்.

தன் மீது வைக்கப்பட்ட லஞ்சப் புகாரைப் பற்றி கருத்து தெரிவிக்காமல், சம்பந்தம் இல்லாமல் சரோஜா பேசிவிட்டுச் சென்றுவிட்டார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close