Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘முதல்வருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அடுத்த நெருக்கடி!’ - அ.தி.மு.க-வில் உருவாகிறதா புதிய அணி?

தீபா

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நெருக்கடி கொடுக்க, 'அ.தி.மு.க.ஜெ.தீபா அணி' தொடங்க முடிவுசெய்துள்ளார், தீபா. 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் என இரண்டு அணிகள் உருவாகின. சசிகலா தலைமையிலான அணி ஆட்சியைக் கைப்பற்றியது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி, சசிகலா அணிக்கு தொடர்ந்து நெருக்கடியைக் கொடுத்துவந்தது. இந்தச் சூழ்நிலையில் சசிகலா, டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க-விலிருந்து ஓரங்கட்ட, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சர்களும் எம்எல்ஏ-க்களும் சம்மதம் தெரிவித்தனர். அடுத்து, அவர்கள் கட்சியையும் முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னத்தையும் மீட்பதற்காக, இரண்டு அணிகளையும் ஒன்றிணைக்க முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், இதுதொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. 

இதற்கிடையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட சசிகலா அணிக்கு, அ.தி.மு.க.அம்மா அணி என்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி என்றும் தேர்தல் ஆணையம் பெயர் சூட்டியது. சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் சிறைக்குச் சென்றபிறகு, அ.தி.மு.க-வில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாகவும் கட்சியில் சில குரல்கள் கேட்கத் தொடங்கியுள்ளன. மத்திய அரசுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெருக்கத்தை ஏற்படுத்த பல்வேறு வகையில் முயற்சித்து வருகிறார். 

இந்தச் சூழ்நிலையில், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது அண்ணன் மகள் தீபா, அரசியலில் குதித்தார். எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையைத் தொடங்கினார். பேரவைக்கான நிர்வாகிகளை நியமிப்பதில் தீபாவுக்கும் அவரது கணவர் மாதவனுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால், மாதவன் புதிய கட்சியைத் தொடங்கினார். குடும்பத்திலும், பேரவையிலும் ஏற்பட்ட குளறுபடி தீபாவுக்கு இறங்குமுகமானது. மேலும், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையிலும் சில சட்டசிக்கல்கள் எழுந்தன. இதனால், பேரவையை துணை அமைப்பாக செயல்படுத்த பேரவை நிர்வாகிகள் முடிவு செய்தனர். அ.தி.மு.க.வும், இரட்டை இலைச் சின்னத்திலும் எங்களுக்கும் உரிமை உள்ளது என்று சொல்லத் தொடங்கியுள்ளனர் தீபா அணியினர். இதற்காக அவர்கள், அ.தி.மு.க.ஜெ.தீபா என்ற அணியைத் தொடங்க தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுக்க பேரவையினர் முடிவு செய்துள்ளனர். 


செல்லராஜாமணிஇதுகுறித்து எம்.ஜி.ஆர்.அம்மாதீபா பேரவையின் மாநிலச் செய்தித் தொடர்பாளர்  செல்லராஜாமணி கூறுகையில், "மக்களைப்பற்றியும் நாட்டைப்பற்றியும் அக்கறை செலுத்தாமல் அ.தி.மு.க.வில் இருக்கும் இரண்டு அணிகளும் உள்ளன. ஒரு அணி ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக பாடுபடுகிறது. இன்னொரு அணி ஆட்சியை கைப்பற்ற துடிக்கிறது. ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அ.தி.மு.க.வை வழிநடத்த இளைய புரட்சித்தலைவி தீபாவை தொண்டர்கள் வற்புறுத்தினர். அதன்பேரில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை தொடங்கப்பட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தீபா போட்டியிட்டார். அவர் அமோக வெற்றி பெறும் சூழ்நிலை நிலவியது. ஆனால், வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்ததால் தேர்தல் ரத்து செய்யப்பட்டுவிட்டது. கட்சியையும் இரட்டை இலைச் சின்னத்தையும் மீட்க எம்.ஜி.ஆர்.அம்மா தீபா பேரவை துணை அமைப்பாக செயல்படும். அதற்குப்பதிலாக அ.தி.மு.க.ஜெ.தீபா அணி என்று புதிய அணியை உருவாக்க முடிவு செய்துள்ளோம். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுக்கவுள்ளோம். இதுதொடர்பாக பேரவை நிர்வாகிகள் கூட்டத்தில் அ.தி.மு.க.ஜெ.தீபா அணி தொடங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தீபா விரைவில் வெளியிடுவார்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close