Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மனம் தளரவில்லை... நண்பர்களின் உதவி..! பிளஸ் 2 தேர்வில் அசத்திய திருநங்கை தாரிகா

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில், தாரிகாபானு என்ற ஒரே ஒரு திருநங்கை மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளார். 


தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தாரிகாபானு, தனது 11-ம் வகுப்பின்போது பச்சைக்கிளியாக இருந்துள்ளார். அவர், தனது 11-ம் வகுப்பை தூத்துக்குடி மாவட்டம் சவலப்பேரி பகுதியில் 2014-ம் ஆண்டு முடித்தார். பிறகு, தனது உடலில் ஏற்பட்ட மாறுதல்களைத் தொடர்ந்து, அறுவைசிகிச்சை செய்துகொண்டு திருநங்கையாக மாறினார். பின்னர், அவரால் தொடர்ந்து படிக்க முடியாமல்போனது. தூத்துக்குடியில் இருந்து வெளியேறிய அவர், திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரில் குடியேறினார்.

பல பள்ளிகளில் படிப்பதற்கு முயன்ற அவருக்கு மிஞ்சியது ஏமாற்றமே. மனம் தளராத அவர், நண்பர்களின் உதவியுடன் தொடர்ந்து படித்துள்ளார். அந்த முயற்சியின் பலனாக, முதன்மைக் கல்வி அலுவலர் படிப்பதற்கு அனுமதி வழங்கினார். அதனையடுத்து, அவர் அம்பத்தூரில் உள்ள காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். அவர், சமூகப் போராட்டத்தில் மட்டுமல்ல பிளஸ் 2 தேர்விலும் வெற்றிபெற்றிருக்கிறார்.

தேர்வு வெற்றிகுறித்து தாரிகா பானு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், 'மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் பள்ளியில் சேர வாய்ப்புக் கிடைத்தது. சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், பாகுபாடு இல்லாமல் பழகினார்கள். மேற்கொண்டு, மருத்துவம் படிக்க விரும்புகிறேன்' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement