Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எதிர் அணியை வளைத்த எடப்பாடி பழனிசாமி! - கட்சியைக் கைப்பற்றும் கொங்கு மண்டல கேபினட்

எடப்பாடி பழனிசாமி

ண்ணா தி.மு.கவின் கட்சிப் பொறுப்பையும் ஆட்சிப் பொறுப்பையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அனைத்து வேலைகளையும் தீவிரமாகச் செய்து வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. ' பிரதமர் மோடியை மின்துறை அமைச்சர் தங்கமணி சந்தித்ததன் நோக்கமும் இதுதான்.' சசிகலா குடும்பத்தின் தலையீடு இருக்காது' என்ற உறுதிமொழியை அடுத்து, கட்சியின் முழுக் கட்டுப்பாடும் பழனிசாமியின் கைகளுக்கு வந்துவிட்டது' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

மத்திய எரிசக்தித்துறை தொடர்பான கூட்டத்தில் பங்கேற்கச் சென்றார் தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி. தமிழக மின் திட்டங்களுக்குத் தேவையான நிதியைக் கோரிய அதேநேரத்தில், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவும் அனுமதி கேட்டார். அவரது கோரிக்கை உடனடியாக ஏற்கப்பட்டது. காரணம், சந்திப்பின் நோக்கத்தை முன்பே தெளிவுபடுத்திவிட்டது அகில இந்திய பா.ஜ.க தலைமை. கடந்த 10-ம் தேதி பிரதமரை சந்தித்துப் பேசினார் தங்கமணி. அவருக்கு முன்பாக, நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றார் முதலமைச்சர் பழனிசாமி. தனிப்பட்ட முறையில் அவரால் பிரதமரிடம் பேச முடியவில்லை. தங்கமணி உடனான சந்திப்பின்போது, தமிழக அரசியல் நிலவரங்கள் பேசப்பட்டன.

சந்திப்பின் முடிவில், 'ஆட்சி மற்றும் கட்சி அதிகாரத்துக்குள் சசிகலா குடும்பம் தலையிடாது' என்ற உத்தரவாதத்தை அவர் அளித்ததாக, அ.தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். "முதல்வராகப் பதவியேற்றப் பிறகு எடப்பாடி பழனிசாமி நடத்தும் அரசியல் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. சசிகலா குடும்பத்தை நேரடியாக எதிர்க்காமல், தன்னுடைய வழியில் அவர் பயணப்பட்டு வருகிறார். தினகரன், சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்களையும் தன்பக்கம் கொண்டு வந்துவிட்டார். ' இன்னும் நான்கு ஆண்டுகள் அதிகாரத்தை முழுமையாக அனுபவிக்க வேண்டுமானால், எங்கள் பக்கம் வாருங்கள்' எனக் கொங்கு மண்டல கேபினட் கொடுத்த உத்தரவாதம்தான் காரணம். பன்னீர்செல்வத்தை ஒரு பொருட்டாகவே கருதாமல், டெல்லி தொடர்புகள் மூலம் காய்களை நகர்த்தி வந்தார் பழனிசாமி. கட்சிக் கட்டுப்பாடும் அவர்களது கையில் வந்துவிட்டது. நேற்று அதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிட்டன" என விவரித்த கொங்கு மண்டல அ.தி.மு.க பிரமுகர் ஒருவர், 

பன்னீர்செல்வம்" சசிகலா அணி, எடப்பாடி அணி, பன்னீர்செல்வம் அணி என மூன்று பிரிவுகளாக கட்சி இருந்தாலும், எடப்பாடி பழனிசாமி பக்கம்தான் 90 சதவீத நிர்வாகிகள் உள்ளனர். இன்றும் தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்யும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையத்தின் சார்பில் அ.தி.மு.க அம்மா அணி சார்பில் தளவாய் சுந்தரம், வேணுகோபால் உள்ளிட்ட பெயர்களை முன்மொழிந்தார் எடப்பாடி பழனிசாமி. டி.டி.வி.தினகரனுக்கு ஆல் இன் ஆலாக இருக்கும் தளவாயை அந்தக் குழுவில் இடம் பெறச் செய்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அப்படியானால், 'தினகரன் ஆட்கள்தான் கட்சி அதிகாரத்தில் கோலோச்சுகிறார்களா?' என்ற கேள்வி வரும். உண்மை அதுவல்ல. தினகரனுக்கு வேண்டியவர்களையும் தன்னுடைய ஆதரவாளர்களாக மாற்றும் ஒரு யுக்திதான் இது.

'தினகரன் இருந்தால் உங்களுக்கு என்ன கிடைக்குமோ, அதை நான் பார்த்துக் கொள்கிறேன்' என பழனிசாமி தரப்பு உறுதிமொழி கொடுத்திருக்கிறது. அண்ணா தி.மு.கவைப் பொறுத்தவரையில், அதிகாரம் யார் பக்கம் இருக்கிறதோ, அதை நோக்கிதான் நிர்வாகிகள் அணி திரள்வார்கள். தற்போது தினகரன்பழனிசாமி பக்கம் காற்று வீசுகிறது. ஒன்று கூடுகிறார்கள். மின்துறை அமைச்சர் தங்கமணி சந்திப்பு முடிந்த அதேநேரத்தில், 'ஜெயலலிதா மரணத்துக்கு நியாயம் வேண்டும்' என சுற்றுப்பயணம் கிளம்பிய பன்னீர்செல்வத்தையும், ' கொஞ்சம் அமைதியாக இருங்கள். பழனிசாமியுடன் இணைந்து செயல்படுங்கள்' என டெல்லி மேலிடம் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் பரவியது. அதனால்தான், பன்னீர்செல்வம் முகாமும் பரபரப்பில்லாமல் சுணங்கிக் கிடக்கிறது. கட்சி மற்றும் ஆட்சி அதிகாரத்தை கொங்கு மண்டலமே கைப்பற்றப் போகிறது" என்றார் விரிவாக. 

" அண்ணா தி.மு.கவின் அதிகாரத்தைக் கையில் கொண்டு வருவதற்கு இடையூறாக இருப்பது ஜெயா டி.வி மட்டும்தான். இரட்டை இலை கைக்கு வந்த பிறகு, ' நிர்வாகத்தில் இருந்து விலகிக் கொள்ளுங்கள்' என இளவரசி மகன் விவேக்குக்கு அறிவுறுத்த இருக்கிறது எடப்பாடி பழனிசாமி டீம். ' இதற்கு யாராவது எதிர்ப்பு தெரிவிக்கலாம்' என்பதை மனதில் வைத்துத்தான், சேகர் ரெட்டியிடம் இருந்து பணம் பெற்ற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பட்டியலை தலைமைச் செயலருக்கு அனுப்பியது வருமான வரித்துறை. அண்ணா தி.மு.கவின் கட்சி லகானை எடப்பாடி பழனிசாமியின் கைகளுக்குக் கொண்டு வருவதில் முக்கியப் பங்கு வகிப்பவர் நீதித்துறையில் அங்கம் வகித்த கொங்கு மண்டலப் புள்ளிதான். அவர் மூலமாகத்தான் பா.ஜ.க தலைமைக்கு அனைத்து உத்தரவாதங்களும் அளிக்கப்பட்டன. ' நான்கு ஆண்டுகள் பா.ஜ.க அரசாகவே இது தொடரும். நீங்கள் செயல்படுத்தும் திட்டங்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்' எனத் தெளிவாகக் கூறிவிட்டனர். இதற்கு டெல்லி மேலிடமும் சம்மதம் தெரிவித்துவிட்டது. அதனால்தான், கூடுதல் உற்சாகத்தோடு அமைச்சர்கள் வலம் வருகின்றனர்" என்கிறார் அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவர். 

குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் பிறகு, அண்ணா தி.மு.கவில் நடக்கப் போகும் பெரும் மாற்றங்கள், ' எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா வழியில் பயணப்படும் ரத்தத்தின் ரத்தங்களுக்கு என்ன மாதிரியான அதிர்வைக் கொடுக்கும்?' என்ற கேள்விகளும் எழாமல் இல்லை. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement