கன்னியாகுமரி கலெக்டரை அதிரவைத்த எம்.எல்.ஏ. | Kanyakumari MLA Prince had dharna protest against district administration

வெளியிடப்பட்ட நேரம்: 19:04 (12/05/2017)

கடைசி தொடர்பு:19:07 (12/05/2017)

கன்னியாகுமரி கலெக்டரை அதிரவைத்த எம்.எல்.ஏ.

கன்னியாகுமரியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் ஆலோசனைக் கூட்டத்துக்கு எம்.எல்.ஏக்களை அழைக்கவில்லை என்று கூறி குளச்சல் தொகுதியின் எம்.எல்.ஏ பிரின்ஸ் போராட்டத்தில் ஈடுபட்டார். 


வீட்டு வசதி வாரியம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் இன்று கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருகை தந்தனர். அனைவருக்கும் வீடு திட்டம் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து குமரி மாவட்ட ஆட்சியருடன் அவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். அந்த கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட எம்.எல்.ஏக்களை அழைக்கவில்லை என குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. பிரின்ஸ் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேசியக் கொடி கம்பத்தின் கீழ் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறும் போது, 'தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகம் அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு வரும்போது எம்.எல்.ஏ.க்களை புறக்கணிக்கிறது. மணல், கல்குவாரி போன்ற பல்வேறு முறைகேடுகள் மாவட்ட நிர்வாகத்தில் நடைபெறுகிறது. புரோக்கர்களின் கூடாரமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாறிவிட்டது. நேற்று நான் அமைச்சர்களை திருவனந்தபுரத்தில் வைத்து சந்தித்தேன். அப்போது ஆலோசனைக் கூட்டம் குறித்து எந்த தகவலையும் மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கவில்லை என்றேன். இது இன்று மட்டுமல்ல தொடர்ச்சியாக நடந்து வருகிறது. மக்கள் பிரதிநிதிகளாகிய எங்களைப் புறக்கணிப்பது தொடர்கிறது.

இதே நிலை நீடித்தால் விரைவில் கன்னியாகுமரி மாவட்டத்துக்குட்பட்ட ஆறு எம்.எல்.ஏ.க்களை ஒன்றிணைத்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடப் போகிறோம். அதற்கு நானே தலைமை ஏற்று நடத்துவேன். அப்போது அரசு அதிகாரிகளும், கலெக்டரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைய முடியாது' என்றார். எம்.எல்.ஏ பிரின்ஸ் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க