Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் தீ ஏற்பட்டால் எப்படி எதிர்கொள்வது? மிரளவைத்த செய்முறை விளக்கம்

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

திருமங்கலம்- நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் விரைவில் மெட்ரோ ரயில் சேவை தொடங்க உள்ளது. இந்த சுரங்கப்பாதையில் தீ விபத்து ஏற்பட்டால் அதனை எப்படி எதிர்கொள்வது தொடர்பான பாதுகாப்பு முறைகளை மெட்ராே அதிகாரிகள் செய்துக்காட்டினர்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 45 கி.மீட்டர் தொலைவுக்கு இரண்டு வழித் தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் கணிசமான ரயில் தடம் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் மேம்பாலம் பணிகள் முடிந்த நிலையில், கடந்தாண்டு முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து சின்னமலை - விமான நிலையம் மற்றும் செனாய் நகர் - கோயம்பேடு இடையிலான சுரங்கப் பாதைகளை நிறைவு செய்யும் பணிகள் முடிவடைந்தது. இதையடுத்து, இரண்டாவது கட்டமாக  சின்னமலை- கோயம்பேடு வரை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது.

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

இதனிடையே, மூன்றாம் கட்டமாக திருமங்கலம்- நேரு பூங்கா இடையே மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்க உள்ளது. முழுக்கமுழுக்க சுரங்கப்பாதை வழியாகவே ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்தநிலையில் சுரங்கப்பாதையில் பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி மெட்ரோ ரயில் அதிகாரிகள் இன்று பத்திரிகையாளர்களுக்கு விளக்கினர். அப்போது, திடீரென சுரங்க ரயில் பாதையில் தீ விபத்து ஏற்பட்டால் அதனை எப்படி எதிர்கொள்வது தொடர்பான பாதுகாப்பு முறைகளை அதிகாரிகள் செய்துக்காட்டினர். சுரங்கப்பாதையில் நடந்த இந்த பாதுகாப்பு முறையை பார்த்து, அங்கிருந்தவர்களை மிரளவைத்தது.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close