Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விரைவில் தேர்தல்.. பன்னீர்செல்வம் முதல்வர்..! : பகீர் கிளப்பும் மைத்ரேயன்

தமிழக அரசு, அதன் பாரம் தாங்காமல் அதுவாகவே கலையும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த, மைத்ரேயன் தெரிவித்துள்ளார். 

maitreyan


சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற நீர்மோர் பந்தல் திறப்புவிழா மற்றும் மக்களுக்கு சர்க்கரை, அரிசி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மைத்ரேயன்  கலந்து கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மைத்ரேயன், 'தமிழ்நாட்டில் அமையவேண்டிய தொழிற்சாலை வேறு மாநிலங்களுக்கு வெளியேறுகின்றன. ஆங்காங்கே மர்மமான முறையில் மரணங்கள் நிகழ்கின்றன. அதற்கான காரணம் தெரியவில்லை.

குடிநீர் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. அமைச்சர்கள் ஒருவரைத் தொடர்ந்து ஒருவர் ஊழல் புகார்களில் சிக்குகின்றனர். அமைச்சர்கள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர்.  எங்களுக்கு 122 கூவத்தூர் பாய்ஸை பற்றிக் கவலை இல்லை. ஒன்றைரை கோடி தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கின்றனர். நாங்கள் கழகத்தின் தொண்டர்களை நம்புகிறோம். அவர்களுடைய பலம் தான், எங்களுடைய பலம்.

நடைபெறும் ஆட்சியில் சட்டமும் இல்லை, ஒழுங்கும் இல்லை. சட்டம் ஒழுங்கு பிரச்னையின் காரணமாக ஆட்சி கலையாது. மாறாது தமிழக அரசு, அதன் பாரம் தாங்காமல் தானாகவே கலையும். விரைவில் சட்டசபை தேர்தல் வரும். அதில் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்று, முதல்வர் ஆவார்' என்றார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close