போக்குவரத்து ஊழியர்களுடனான பேச்சுவார்த்தையில் இழுபறி... ஸ்டிரைக் அறிவிப்பு வாபஸ் இல்லை..!

போக்குவரத்து ஆணையருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை இழுபறியில் முடிந்ததையடுத்து, இன்று மாலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. எனவே, ஸ்டிரைக் அறிவிப்பை வாபஸ் பெற முடியாது என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

கோப்புப்படம்


சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல வாரியத்தில், தொழிலாளர் நலத் துறை ஆணையர் யாஸ்மின் பேகம் தலைமையில் பேச்சுவார்த்தைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இன்று காலையில் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. இதனைத் தொடர்ந்து இன்று மாலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தொ.மு.ச தலைவர் சண்முகம், 'அதிகாரிகள் தரப்பில் இருந்து உத்தரவாதம் ஏதும் அளிக்கப்படவில்லை. 1,700 கோடி ரூபாய் பணம் எப்போது திரும்ப அளிக்கப்படும் என்பது குறித்து அரசாணை வெளியிட வேண்டும்' என்று தெரிவித்தார். இந்த நிலையில் நாளை இந்த விவகாரம் தொடர்பாக இவர்கள் முதல்வரை சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகள் குறித்து உறுதியான தகவல்கள் ஏதும் அளிக்கப்படவில்லை. இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!