வெளியிடப்பட்ட நேரம்: 20:25 (13/05/2017)

கடைசி தொடர்பு:10:06 (15/05/2017)

கணவர் கொடுமையால் தற்கொலை... இளம்பெண் உருக்கமான வீடியோ பதிவு!

நீடாமங்கலத்தைச் சேர்ந்த கெளரி தனது கணவர் கொடுமையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இறப்பதற்கு முன்னர் வீடியோ ஒன்றை பதிவிட்டு சென்றுள்ளார்.

கெளரி

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நீடாமங்கலத்தைச் சேர்ந்த கெளரிக்கும், சிக்கப்பட்டு கிராமத்தை சேர்ந்த முருகப்பனுக்கும் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு பிரதிக்‌ஷா என்ற பெண் குழந்தை உள்ளது. இவர்களின் குடும்ப வாழ்க்கையில், முருகப்பனின் சந்தேக குணத்தால் பல கொடுமைகளுக்கு கெளரி ஆளாகியுள்ளார். இரு வீட்டாரும் சமாதானம் செய்தும் இவர்களுக்குள் ஒத்துப்போகவில்லை. இதையடுத்து விவாகரத்து கேட்டு இருவரும் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.

இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு கிராம பஞ்சாயத்து மூலம் இருவரும் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்ததால், ஒன்றாக நீடாமங்கலத்தில் வாழ்ந்து வந்துள்ளனர். இதையடுத்து 12-ம் தேதி முருகப்பன் தனது மகளுடன் சிக்கப்பட்டு கிராமத்துக்குச் சென்றுள்ளார். அன்று மாலை பால்காரர் வந்து பார்க்கும்போது கெளரி தூக்கில் தொங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து கெளரியின் செல்போனில் அவரது  மரண வாக்குமூலம் இருப்பது போலீஸாருக்கு தெரியவந்துள்ளது. இதில் கணவர் கொடுமையால் தான் இம்முடிவை எடுப்பதாக கெளரி தெரிவித்துள்ளார். மேலும், தனது குழந்தையை தன்னுடைய பெற்றோர் கவனித்துக் கொள்ள வேண்டும் என உருக்கமாக பேசியுள்ளார் கெளரி. இதையடுத்து கெளரியின் கணவர் முருகப்பனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க