மெட்ரோ ரயில் சேவை தொடக்கம் - மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு பரபரப்பு பேச்சு..!

ஜெயலலிதாவின் கனவுகளை நினைவாக்க மத்திய அரசு துணை நிற்கும் என்று மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார். 


சென்னை திருமங்கலம்-நேரு பூங்கா இடையிலான மெட்ரோ ரயில் சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடுவுடன் இணைந்து மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசு கேபிளுக்கு டிஜிட்டல் உரிமம் வழங்கியதற்கு மத்திய அரசுக்கு நன்றி. மெட்ரோ ரயில் சேவைக்கு கூடுதல் நிதி பெற்றுத் தந்த வெங்கைய நாயுடுவுக்கு நன்றி. மெட்ரோ ரயில் திட்டம் பெருமளவில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும். தி.மு.க ஆட்சிக் காலத்தின்போது மெட்ரோ ரயில் பணி மந்தமாக நடைபெற்றது' என்றார்.

அதன்பிறகு பேசிய மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு, 'என்னை தமிழக அரசின் நண்பன் என்று ஜெயலலிதா கூறினார். கட்சிக்கு அப்பாற்பட்டு நான் மிகவும் மதிக்கும் ஆற்றல் மிகுந்த தலைவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் கனவுகளை நினைவாக்க மத்திய அரசு துணைநிற்கும். மெட்ரோ தொடக்க விழாவில் ஜெயலலிதா இல்லாதது வருத்தம் அளிக்கிறது. 2-ம் கட்ட மெட்ரோ பணிக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கும். மத்திய அரசு அனைத்து மாநிலங்களுடனும் இணைந்து செயல்பட விரும்புகிறது' என்றார். மெட்ரோ திறப்பு விழாவில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!