Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'வேலை நிறுத்தம் நடந்தே தீரும்' : போக்குவரத்து தொழிற்சங்கங்கள் திட்டவட்டம்!

13-வது ஊதிய ஒப்பந்தம் மற்றும் தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று  அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 


திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது. போக்குவரத்து ஊழியர்கள் பணிமனையை முடக்கியுள்ளனர்.

இதனால் பெரும்பாலான பகுதிகளில் பேருந்து இயக்கம் தடைப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று முதலே வேலை நிறுத்தம் தொடங்கிவிட்டதை கடிதம் எழுதி எழுத்துபூர்வமாக அமைச்சரிடம் அளிக்க தொழிற்சங்க நிர்வாகிகள் சென்றனர். கடிதத்தை வாங்க மறுத்த அமைச்சர், மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இதனையடுத்து மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.


இதன் பின் தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், "போக்குவரத்து ஊழியர்களின் ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்டவற்றை குறித்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர் எங்களது கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. எங்களது கடனில் ஒரு பகுதியை மட்டும் தருவதாக அறிவித்ததால், வேலை நிறுத்தை கைவிட முடியாது.


இதனால் வேலை நிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும். அரசு போக்குவரத்துக் கழகத்தின் இழப்பீட்டை அரசுதான் ஏற்க வேண்டும். வேலை நிறுத்தத்தில் அனைவரும் பங்கேற்பார்கள். அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளும் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள்.


எங்களது கோரிக்கையை நிறைவேற்றுவதை விட்டுவிட்டு, தொழிலாளர் விரோதப் போக்கை அரசு மேற்கொண்டு வருகிறது. எந்தப் பகுதியிலும் பேருந்து இயங்காது. பணிமனை ஊழியர்கள், தற்காலிகப் பணியாளர்களை வைத்து, பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. அவற்றை முறியடிப்போம்" என்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close