Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விஜயபாஸ்கர் ஆய்வு!

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கும் அரசுக்கும் இடையே நேற்று நடைபெற்ற பேச்சுவார்தை தோல்வியில் முடிந்ததையடுத்து பெரும்பாலான மாவட்டங்களில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தைத் தொடங்கினர். போக்குவரத்து ஊழியர்கள் முன்கூட்டியே தங்கள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியதை அடுத்து தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வெளியூர் செல்லும் பயணிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர். 

அமைச்சர் விஜயபாஸ்கர்

இதையொட்டி, நேற்று இரவு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார். பயணிகள் அவதியுறாமல் தடுக்கும் முன்னேற்பாடு, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அவர் அதிகாரிகளிடம் விசாரித்ததாகக் கூறப்படுகிறது. பயணிகளின் சிரமத்தைத் தவிர்ப்பதற்காக சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'பேருந்துகளை இயக்குவதைத் தடுப்பவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். ஆம்னி பேருந்துகள் அதிகமான கட்டணம் வசூலித்தால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்' என்று அமைச்சர் தெரிவித்தார்.

அதன்பிறகு, அண்ணாநகர் பணிமனை உள்ளிட்ட இடங்களிலும் அமைச்சர் ஆய்வு செய்ததாகக் கூறப்படுகிறது. அவரது அறிவுறுத்தலின் பேரில் மாநகரப் பேருந்துகள் பணிமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன. ஓய்வுபெற்ற ஊழியர்களை வைத்துப் பேருந்துகளை இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம். தற்காலிகப் பணியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement