Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாகத் திரண்ட கூட்டம்... சீறிய 'நாஞ்சில்' சம்பத்!

ttv dinakaran

நெல்லையில் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. தினகரனின் ஆதரவாளர்களான நாஞ்சில் சம்பத், புகழேந்தி, சாமி ஆகியோர் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியால்தான் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டார் என பொதுக்கூட்டத்தில் பேசிய பலரும் கண்டனத்தை பதிவு செய்தனர். அ.தி.மு.க அம்மா அணியின் சார்பாக பல்லாயிரக் கணக்கில் தொண்டர்கள் இக்கூட்டத்தில் திரண்டனர். இந்தக் கூட்டத்தை மத்திய, மாநில உளவுத் துறையினர் கவனமாக ஆய்வு செய்தனர். தொடர்ந்து கூட்டம் முழுவதையும் தங்கள் கண்காணிப்பு வளையத்தில் வைத்திருந்தனர். 

sampath

குறிப்பாக இக்கூட்டத்தில் பேசிய 'நாஞ்சில்' சம்பத், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தையும், முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியனையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். 10 மணியைத் தாண்டியும் அவர் பேசியதால் காவல்துறையினர் அதனைச் சுட்டிக் காட்டினர். உடனே ஆவேசம் அடைந்த 'நாஞ்சில்' சம்பத், 'என் மீது வழக்குப் போடுங்கள். டி.டி.வி-க்காக போடப்பட்ட வழக்கு எனக்காக இருக்கட்டும்' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close