மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஒரு ரவுண்ட்-அப்!!

madurai

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்ட அறிவிப்பையடுத்து தமிழக மாவட்ட தலைநகரங்களில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. இந்நிலையில் தென் தமிழகத்தின் முக்கிய நகரமான மதுரையில் இரவு பெருவாரியான அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. குறிப்பாக எந்நேரமும் பரபரப்பாக காட்சியளிக்கும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வெறிச்சோடியுள்ளது.

மதுரை மாட்டுத்தாவணியிலிருந்து சென்னை, பெங்களுர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருத்துகள் இயக்கப்படவில்லை. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இதில், SETC அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஒட்டுநர் மற்றும் நடத்துநர் பணியில் உள்ளனர். மதுரையில் புறநகர் செல்லும் பேருந்துகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. மினி பேருந்து மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!