வெளியிடப்பட்ட நேரம்: 14:54 (15/05/2017)

கடைசி தொடர்பு:18:33 (15/05/2017)

#Alert ’வெப்ப நிலை 40 டிகிரி செல்சியஸ்’... சென்னை மக்களை எச்சரிக்கும் வெதர் மேன்!

சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இன்று வெயில் சுட்டெரிப்பதாக தமிழகத்தின் வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

weatherman

 
 

தமிழ்நாட்டு வெதர்மேன் என்று இணையவாசிகளால் அன்புடன் அழைக்கப்படும் பிரதிப் ஜான் தமிழக வானிலையை முன்னரே கணித்துச் சொல்வதில் வல்லவர். முக்கியமாக, சென்னை வானிலை குறித்த அவருடைய கணிப்புகள் தவறியதே இல்லை. 

 

 

இந்நிலையில், சென்னையில் வெயிலின் தாக்கத்தைக் குறித்து இன்று ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ள வெதர்மேன், "இந்த ஆண்டின் மிகவும் வெப்பமான நாள் இன்றுதான்" என்று தெரிவித்துள்ளார். அவரின் பதிவில் பின்வரும் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.. ‘இன்று சென்னை நகரின் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தொட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதிக்குப் பிறகு, இன்றுதான் இவ்வளவு வெப்பம் பதிவாகியுள்ளது. வரும் நாள்களில் இதைவிடக் கடுமையான வெப்பம் பதிவாகும். சென்னையில், இந்த ஆண்டின் மிகவும் வெப்பமான நாள் இன்று. எனவே சென்னை மக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்கவும். முக்கியமாக, குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வெளியே செல்வதைத் தவிர்ப்பது நல்லது’ என்று அவர் எச்சரித்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க