வெளியிடப்பட்ட நேரம்: 21:06 (15/05/2017)

கடைசி தொடர்பு:07:22 (16/05/2017)

மத்திய அரசைக் கண்டித்து ரயில் மறியல்...திருச்சியில் 100க்கும் மேற்பட்டோர் கைது

திருச்சியில் இன்று காவிரி மீட்பு குழுவின் சார்பில் மத்திய அரசைக் கண்டித்து ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரயில் மறியல்

திருச்சி மாவட்டம்  பெட்டவாய்த்தலையில்  காவிரி உரிமை மீட்பு குழு சார்பாக, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்தி காவிரி  நீரை பெற்றுக்கொடுக்க  தவறிய மத்திய அரசைக் கண்டித்தும்,   7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தக் கோரிக்கைகளை முன்னிறுத்தி காவிரி உரிமை மீட்புக்குழு, 7 நாள்கள் தொடர் ரயில் மறியல் போராட்டம் அறிவித்துள்ளது. அந்தவகையில் முதல்நாளான இன்று திருச்சியில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதில் சமூக நீதிப் பேரவை திருச்சி மாவட்டச் செயலாளர் ரவிக்குமார், காவிரி உரிமை மீட்பு குழுவைச் சேர்ந்த கவித்துவன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ம. ப. சின்னத்துரை, தி.மு.க விவசாய தொழிலாளரணி மாவட்ட அமைப்பாளர் துரைபாண்டியன், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் முகிலன், காவிரி மீட்புக் குழு பாஸ்கர்  ஆகியோர் தலைமையில்  200 க்கும் மேற்பட்டோர் திருச்சியின் காவிரி தலைப்பு பகுதியான பெட்டவாய்த்தலையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரியை மீட்போம் என்கிற கோஷமிட்டபடி, ரயிலின் முன்பு உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை  போலீஸார் கைது செய்துள்ளனர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க