Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெயலலிதாவின் கார் டிரைவர் என்னை செல்போனில் அழைத்தது ஏன்?.. ஆறுக்குட்டி விளக்கம்!

ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜின் போனில் இருந்து ஆறுகுட்டிக்கு அழைப்பு சென்றது பற்றிய விசாரணைக்காக, எம்எல்ஏ ஆறுக்குட்டி இன்றே ஆஜராகிறார். நாளை விசாரணைக்கு வரும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

aarukutty
 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம்  கார் ஓட்டுநராகப் பணியாற்றியவர் கனகராஜ். இவர், கடந்த 28-ம் தேதி விபத்தில் சிக்கி உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. ஜெயலலிதாவின் கொடநாடு பங்களா கொள்ளை மற்றும் காவலாளி கொலை தொடர்பாக தீவிரமாகத் தேடப்பட்டுவந்த இவர், மர்மமான முறையில் மரணமடைந்தார். ஆனால், விபத்தில் சிக்கி உயிரிழந்ததாகக் கூறப்பட்டுவந்தது. இதுதொடர்பாக, போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில், கனகராஜ் மரணம் தொடர்பான விசாரணையில், நேரில் ஆஜராகும்படி கோவை கவுண்டாம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டிக்கு, சேலம் காவல்துறை சம்மன் அனுப்பியது. 

விபத்தில் சிக்கி கனகராஜ் மரணமடைவதற்கு முன் அவர், எம்எல்ஏ ஆறுக்குட்டிக்கு நான்கு முறை செல்போனில் அழைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில், அழைப்பு வந்ததுகுறித்து விசாரணை நடத்த, ஆறுக்குட்டி எம்எல்ஏ., நாளை காலை 10 மணிக்கு ஆத்தூர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகும்படி, சேலம் காவல்துறை சம்மன் அளித்துள்ளது. அ.தி.மு.க எம்எல்ஏ-வான ஆறுக்குட்டி, ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து அவரது அணியில் இணைந்தவர்.

திண்டுக்கல்லில் நாளை ஓபிஎஸ் அணியின் கூட்டம் இருப்பதால், ஆறுக்குட்டி இன்றே ஆத்தூர் காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகிறார்.  கனகராஜின் செல்போன் அழைப்புகுறித்து விளக்கம் அளித்துள்ள ஆறுக்குட்டி, ‘நான் சென்னைக்கு வந்தால், கனகராஜ் காரில் அழைத்துச் செல்வது வழக்கம். அதுதொடர்பாகத்தான் என் செல்போனுக்கு அழைத்தார்’ என்று தெரிவித்துள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close