Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் தனபாலை சந்திக்க இதுதான் காரணம்..!

சட்டப்பேரவை கூட்டத்தொடரை கூட்டுவது தொடர்பாக சபாநாயகர் தனபாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். 


எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு மார்ச் 16-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. நிதி அமைச்சர் ஜெயக்குமார், பட்ஜெட் தாக்கல் செய்தார். பிறகு அந்தப் பட்ஜெட்டின் மீது விவாதம் நடைபெறாமலேயே கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. தற்போதுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தைக் கூட்ட தி.மு.க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், சட்டப் பேரவைக் கூட்டத்தொடரைக் கூட்டுவது குறித்து தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகர் தனபாலைத் தலைமைச் செயலகத்தில் அவரது அறையில் சந்தித்துப் பேசினார். தி.மு.க சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலைச் சபாநாயகர் தனபாலிடம் தி.மு.க உறுப்பினர்கள் அளித்தனர். பின்னர் தீர்மான மனுவை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தி.மு.க கொறடா சக்கரபாணி அளித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சக்கரபாணி, 'விரைவில் சட்டப்பேரவையைக் கூட்டுவதாக முதல்வர் கூறியதாக' தெரிவித்தார். எனவே, விரைவில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close