ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்! தமிழக அரசு அறிவிப்பு | TN government transfers IAS officials

வெளியிடப்பட்ட நேரம்: 20:32 (16/05/2017)

கடைசி தொடர்பு:07:38 (17/05/2017)

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்! தமிழக அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதிலும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்துள்ளது தமிழக அரசு.

தலைமை செயலகம்

மாற்றப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் விவரம் தொடர்பாக தலைமைச் செயலகம்  செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆனந்த்ராவ் விஷ்ணு பட்டேல், மின் ஆளுமை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்னசன்ட் திவ்யா, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரபுசங்கர், திண்டிவனம் உதவி கலெக்டராகவும், ஷமீரன், மீன் வளத்துறை கூடுதல் ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் ஆகாஷ், சேரன்மகாதேவி உதவி கலெக்டராகவும், லலிதா, சென்னை பெருநகர மாநகராட்சி துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அமர்குஷாவா உதகை மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ராகுல்நாத் ஊரக மேம்பாட்டுத் துறை செயலராகவும், கஜலட்சுமி சேலம் மேக்னசைட் லிமிடெட் மேலாண் இயக்குநராகவும், ஸ்ரீதர் தர்மபுரி சர்க்கரை கூட்டுறவு ஆலை நிர்வாக இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.