போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்!

போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம், தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

bus

13-வது ஊதிய ஒப்பந்தம் மற்றும் தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்துத் தொழிலாளர்களின் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். வேலை நிறுத்தப் போராட்டத்தைச் சமாளிக்க, தமிழக அரசின் சார்பில் தற்காலிக பேருந்து ஓட்டுநர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

இதனிடையே, வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இன்று, எம்.ஆர்.விஜயபாஸ்கர், செங்கோட்டையன், தங்கமணி ஆகியோருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. நிலுவைத் தொகை 1,000 கோடி ரூபாயைத் தர அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மீதமுள்ள நிலுவைத் தொகை செப்டம்பரில் வழங்கப்படும் என அரசு உறுதியளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பேருந்துகள் வழக்கம் போல நாளை இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!