மகனைப் பிரிந்த ஏக்கம்... பெண் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை !

மகனைப் பிரிந்து வாழ்ந்த ஏக்கத்தில், பெண் மருத்துவர் தற்கொலைசெய்துகொண்ட சம்பவம், பெரும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூளை, மாணிக்கம் தெருவில் வசித்தவர், சுதா மல்லிகா. சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றிவந்தார். மருத்துவ மேற்படிப்பான எம்.டி-யும் படித்துவந்தார். சுதா மல்லிகாவின் கணவர் சதீஷ்குமாரும் அதே மருத்துவமனையில் டாக்டராக இருக்கிறார். எம்.பி.பி.எஸ். படிக்கும்போது இவர்களுக்குள் மலர்ந்த காதல், இரு வீட்டார் சம்மதத்துடன் இரண்டாண்டுகளுக்கு முன் திருமணத்தில் முடிந்தது.

doctor

மருத்துவத் தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஒரு மகன் இருக்கிறான். கணவன் மனைவி இருவரும் அன்றாடப் பணிக்குச் சென்று விடுவதால், குழந்தையைப் பராமரிக்க ஆள் இல்லாமல் திணறினர். ஈரோட்டில் இருக்கும் சுதா மல்லிகாவின் பெற்றோர், குழந்தையைப்  பார்த்துக்கொள்ள முன்வந்ததால் குழந்தையை அங்கேயே விட்டுவிட்டனர்.

குழந்தை, தன் தாயாரிடம் இருந்தாலும் சுதா மல்லிகாவின் மனம் சென்னையில் நிம்மதியாக இல்லை. தினமும் தாயாருக்குப் போன்செய்து, குழந்தையின் குரலை போனில் கேட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று, வழக்கமான நேரத்தில் தாயாருக்கு சுதா மல்லிகா போன் செய்யவில்லை. சுதா மல்லிகாவின் போன் வராததோடு, அவரது எண்ணிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து, சுதா மல்லிகாவின் கணவர் சதீஷ்குமார் போனில் தொடர்பு கொண்டார். சதீஷ்குமார் பதறிய நிலையில் வீட்டில் சுதா மல்லிகாவைத் தேடினார். தனியறையில் சுடிதாரின் துப்பட்டாவில் சுதா மல்லிகா தூக்கிட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார். தற்கொலைக்கான காரணமாக, ஒரு கடிதத்தையும் சுதா மல்லிகா எழுதியுள்ளார். அதில், 'தாய்ப்பாசத்தில் ஒவ்வொரு நாளும் துடிக்கிறேன் மகனே', என்று தொடங்கி மகனின் பிரிவால் படும் துயரத்தை மட்டுமே எழுதி வைத்துள்ளார். சுதா மல்லிகாவின் பெற்றோருக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. சுதா மல்லிகாவின் உடல், உடற்கூறு ஆய்வுக்காக அவர் பணியாற்றிய அதே ஸ்டான்லி மருத்துவமனைக்கு போலீஸாரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!