Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்குப் புதிய கட்டுப்பாடு!

'108' ஆம்புலன்ஸ் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 920 வாகனங்கள்  செயல்படுகின்றன. இந்தத் திட்டத்தைச் செயல்படு்த்திவரும் ஜி.வி.கே.இ.எம்.ஆர்.ஐ நிறுவனம், வாகனப் பராமரிப்பு நிதி, எரிபொருள், மருத்துவ உபகரணங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி போன்றவற்றில் ஊழல் செய்துவருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.  

108


 

இந்நிலையில், வாகனத்தில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவியைப் பொருத்தியதன் நோக்கமே கேள்விக்குள்ளாகியிருக்கிறது. இக்கட்டான தருணங்களில், 60 கி.மீ. வேகத்துக்கு மேல் ஆம்புலன்ஸ் ஓட்டுபவர்களை, வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள ஜி.பி.எஸ். கருவிமூலம் கண்டறிந்து, எச்சரிக்கைக் கடிதம் அனுப்புகின்றனர். 'மைலேஜ்' குறைவாகக் கிடைத்தால், மிரட்டல் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. மூன்று முறைக்கு மேல் எச்சரிக்கைக் கடிதம் பெற்றவர்களைப் பணி நீக்கம் செய்கின்றனர். இந்தத் திட்டத்தால், அவசரச் சூழல்களில் நோயாளிகளை சரியான நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு சேர்ப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக ஓட்டுநர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close