விஜயபாஸ்கர்  வீட்டில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில், மீண்டும் வருமானவரி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

Vijaya Baskar
 

ஏப்ரல் 7-ம் தேதி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட சுமார் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி, நடிகர் சரத்குமார் உள்ளிட்டவர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 

வருமானவரி சோதனையின்போது, விஜயபாஸ்கரின் வீடுகளில் இருந்து ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை அலுவலகத்தில் விஜயபாஸ்கர் நேரில் விளக்கம் அளித்தார். அவர் மீது வழக்கு ஏதும் பதிவுசெய்யப்படவில்லை. விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவுக்கும்  வருமானவரித்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறை இன்று சோதனை நடத்தி வருகிறது. ஏற்கெனவே நடைபெற்ற சோதனையின்போது, ஒரு அறையைப் பூட்டி சீல் வைத்துவிட்டுச் சென்றனர். தற்போது, பூட்டிக்கிடந்த அந்த அறையைச் சோதனைசெய்தபோது சிக்கிய ஆவணங்கள், நகைகள் சரிப்பார்க்கப்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!