அமைச்சர் ஜெயக்குமார் சூப்பர் டூப்பர் முதல்வர் - மு.க.ஸ்டாலின்..!

'நிதி அமைச்சர் ஜெயக்குமார், சூப்பர் டூப்பர் முதலமைச்சராகச் செயல்படுகிறார்' என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சிப் பணியின் காரணமாக திருச்சி செல்கிறார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், 'தமிழகத்தில் குடிக்கக்கூடத் தண்ணீர் இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. போக்குவரத்துத்துறைக்கு அரசு நிதி ஒதுக்கியதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது மகிழ்ச்சியான விஷயம். ப.சிதம்பரம் வீட்டில் நடந்த சிபிஐ சோதனையை அவர் சட்டப்படி எதிர்கொள்வார். அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் ராமமோகனராவ் வீடுகளில் நடைபெற்ற சோதனை எந்த நிலையில் உள்ளது? நிதி அமைச்சர் ஜெயக்குமார் சூப்பர் டூப்பர் முதல்வராகச் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்' என்று தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!