'மரபணு மாற்றம் செய்த பயிர்களுக்குத் தடை விதிக்க வேண்டும்!'- சீமான் வலியுறுத்தல்

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

சீமான்

இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு ரகங்களைப் பயிரிடுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்குப் பல்வேறு விவசாய சங்கங்களும் அரசியல் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களைத் தடை செய்ய வலியுறுத்தியுள்ளார் சீமான். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மரபணு மாற்றப்பட்ட கடுகால் பாரம்பர்ய கடுகு வகையை மொத்தமாக சிதைத்துவிடும் பேராபத்து  நிறைந்திருக்கிறது. இதன்மூலம் பல்வேறு வகையான மரபணு மாற்றப்பயிர்களைப் பன்னாட்டு விதை நிறுவனங்கள் உருவாக்கி அவற்றை இந்திய வேளாண் சந்தையில் ஊடுருவச் செய்யக்கூடிய அபாயமும் உள்ளது' எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர், 'மரபணு மாற்றக் கத்தரிக்காயை அன்றைய காங்கிரஸ் அரசானது கொண்டுவர முற்பட்டபோது அதனை எதிர்த்த பா.ஜ.க, இன்றைக்கு மரபணு மாற்றக் கடுகைத் திணிக்க முற்படுவது நகைமுரணாகும். மரபணு மாற்றப்பயிர்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது அறிக்கை வெளியிட்ட பா.ஜ.க தற்போது அதற்கு எதிராக மரபணு மாற்றப்பயிர்களை அனுமதிக்க முற்படுவது ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் செய்கிற பச்சைத்துரோகமாகும். மேலும் மாநில உரிமைகளைக் காக்கும்பொருட்டு தமிழக அரசானது மரபணு மாற்றப்பயிர்களுக்கு எதிராகக் குரலெழுப்ப வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்' என்று அறிக்கையில் கூறியுள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!