திண்டுக்கல் கூட்டத்தில் காலியான இருக்கைகள்... ஓ.பி.எஸ் ஓப்பன் டாக்..!

o.p.s

திண்டுக்கல்லில், அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் நூற்றாண்டு விழா மற்றும் கழக வளர்ச்சி குறித்து செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அந்த அணியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், வேடசந்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பழனிச்சாமி மற்றும் நிலக்கோட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் ஆகியோர், ஓ.பி.எஸ் முன்னணியில் அவரது அணியில் இணைந்தனர். கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், 'முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்ததற்கும், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் சிறை சென்றதற்கும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ராசிதான் காரணம்', எனும் பகீர் குற்றச்சாட்டை வைத்தார்.

பின்னர் பேச வந்த ஓ.பன்னீர்செல்வம், 'ஸ்டாலின் டீ குடித்தது என்ன அபூர்வ செயலா? நான் டீக்கடையே நடத்தியிருக்கிறேன். எனக்கு நிதியமைச்சர் பதவியை விட்டுக்கொடுப்பதாகச் சொல்லும் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எவ்வளவு திமிர்', என ஆவேசமாகப் பேசினார். ஓ.பி.எஸ் சிறப்புரை ஆற்றிக்கொண்டிருக்கையில், தொண்டர்களுக்காக போடப்பட்ட நாற்காலிகளில் பெரும்பாலானவை காலியாகவே இருந்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!