Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனியார் பள்ளிகள் அளிக்கவேண்டிய 25% இடஒதுக்கீடு குறித்த முக்கிய அறிவிப்பு!

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் குழந்தைகளுக்கு, இணையம் வழியாக விண்ணப்பிப்பதற்கான காலவரையறை வரும் 26 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

RTI
 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

”வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு, தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதை இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 வலியுறுத்துகிறது. தமிழகத்தில் இந்த சட்டம் 2013-2014ஆம் கல்வியாண்டு முதல் நடைமுறையில் உள்ளது. 

சட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் வகையிலும், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன்பெறும் வகையிலும், வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் பொருட்டும் 2017-201ஆம் கல்வியாண்டு முதல் 25சதவிகித ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு இணையம் வழி விண்ணப்பிக்க அரசால் ஆணையிடப்பட்டது. இதற்கான வசதி http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 40,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 

இந்தச் சேர்க்கைக்கு இணைய வழியாக விண்ணப்பிக்க,  ஏப்ரல்20 ஆம் தேதி முதல் மே18 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு இவ்வகைச் சேர்க்கைக்கு இணைய வழியாக விண்ணப்பிப்பதற்கான காலவரையறை, மே 26 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. 

தமிழக அரசு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டவாறு முதன்மைக் கல்வி அலுவலர் / மாவட்டக் கல்வி அலுவலர்/மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் ஆய்வாளர்/மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்/உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்/வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆகியோரது அலுவலகங்களில் எவ்விதக் கட்டணமும் இல்லாமல் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம். மேலும், மாநிலம் முழுவதும் உள்ள 10,000-க்கும் மேற்பட்ட அரசு இ-சேவை மையங்களைப் பதிவேற்றம் செய்வதற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். 

மேற்காணும் வழிகாட்டுதலின்படி சமுதாயத்தில் நலிவடைந்த, வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்புப் பிரிவினரின் குழந்தைகள், சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் சேரும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்காத தனியார் பள்ளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close