வெளியிடப்பட்ட நேரம்: 11:47 (18/05/2017)

கடைசி தொடர்பு:12:11 (18/05/2017)

சென்னையில் சிக்கிய செல்லாத ரூ. 40 கோடி... சிக்கியவர் பா.ஜ.க பிரமுகர்?

சென்னை கோடம்பாக்கத்தில் இன்று காலை பிடிபட்ட செல்லாத பணம் ரூ. 40 கோடி, தி.நகரில் உள்ள நகைக்கடை அதிபர்கள் மூவருக்குச் சொந்தமானது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

chennai kodambakkam
 

சென்னை, சூளைமேடு ஜக்கரியா காலனி இரண்டாவது தெருவில் வசிப்பவர், தண்டபாணி. சென்னை கோடம்பாக்கத்தில்  ராமநாதன் அண்ட் சன்ஸ் என்ற நிறுவனத்தை நடத்திவருகிறார். சினிமா படப்பிடிப்புக்குத் தேவையான போலீஸ் சீருடைகளை இந்த நிறுவனத்தில் தண்டபாணி விற்பனைசெய்துவருகிறார். 

சினிமா கதாபாத்திர போலீஸாருக்கு போலீஸ் சீருடை தயாரித்து விற்கும் தண்டபாணியின் நிறுவனத்தில், கடந்த நான்கு மாதங்களாக பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொடுக்கும் வேலை நடந்துவந்துள்ளது. 

விசாரணையில், தண்டபாணி பா.ஜ.க-வில் தொடர்புள்ளவர் என்கிறார்கள். டெல்லியில் உள்ள முக்கிய ஆட்களின் சென்னைத் தரகர்கள் மூலமாக இந்தப் பணப்பரிமாற்றம் நடந்துவந்துள்ளதாம். நகைக்கடைகள், சினிமாத்துறை சார்ந்த பலரின் பணம், தண்டபாணி மூலமாக மாற்றிக் கொடுக்கப்பட்டுவந்துள்ளது. தொழில் போட்டியின் காரணமாக காட்டிக்கொடுக்கப்பதால், மூன்று நகைக்கடை அதிபர்களின் பணம் இதில் சிக்கியுள்ளதாம். இது தொடர்பாக அவர்களிடமும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.