Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழக மாவட்டங்களின் படிப்பறிவு சதவிகிதம்..! உங்கள் மாவட்ட ஸ்கோர் என்ன?

தமிழ்நாட்டில் அதிக படிப்பறிவுகொண்ட மாவட்டங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆண், பெண் இருபாலரிலும் கன்னியாகுமரி மாவட்டம்தான் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்துக்குக் கடைசி இடம்.

படிப்பறிவு

கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் படிப்பறிவு நிலை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக ஆண்களில் 86.81 சதவிகிதத்தினரும், பெண்களில் 73.86 சதவிகிதத்தினரும்  படிப்பறிவு பெற்றுள்ளனர். 

மாவட்ட அளவில், கன்னியாகுமரி மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. இங்கு 93.86 சதவிகித ஆண்கள் படிப்பறிவு பெற்றுள்ளனர். சென்னை மாவட்டம், 93.47 சதவிகிதத்துடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. நீலகிரி மாவட்டத்துக்கு மூன்றாம் இடம். 92.15 சதவிகித ஆண்கள், இங்கு படிப்பறிவு பெற்றுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்துக்கு நான்காம் இடம். இந்த மாவட்டத்தில் 91.42 சதவிகித ஆண்கள் படிப்பறிவுகொண்டவர்கள். நாகப்பட்டினம் மாவட்டம், 90.38 சதவிகிதத்துடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. அடுத்த இடத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பிடித்துள்ளது. 90.34 சதவிகித ஆண்கள் இங்கு படிப்பறிவுகொண்டவர்கள்.

திருச்சி மாவட்டத்துக்கு ஏழாம் இடம். 90 சதவிகித ஆண்கள் இங்கு படிப்பறிவுகொண்டவர்கள். ஆண்களில் இந்த ஏழு மாவட்டங்கள் மட்டும்தான் 90 சதவிகிதத்துக்குமேல் விழுக்காடு பெற்றுள்ளன. கடைசி இடத்தில் தர்மபுரி மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் 69.16 சதவிகித ஆண்களே கல்வியறிவு பெற்றுள்ளனர்.

பிற மாவட்டங்களின் விவரம் (ஆண்கள்):

மாவட்டம் தேர்ச்சி விகிதம்
திருவள்ளூர் 89.18
வேலூர் 86.96
கிருஷ்ணகிரி 79.65
திருவண்ணாமலை 83.73
விழுப்புரம் 80.58
சேலம் 80.07
கோவை 89.49
திருப்பூர் 86.07
திண்டுக்கல் 84.91
கரூர் 84.86
பெரம்பலூர் 83.39
அரியலூர் 82.06
கடலூர் 86.84,
திருவாரூர் 89.65
தஞ்சை 89.06
புதுக்கோட்டை 86.19
சிவகங்கை 88.61
மதுரை 86.55
தேனி  85.48 
விருதுநகர் 88.86
ராமநாதபுரம் 87.89
நெல்லை 89.66

 

 

படிப்பறிவு நிறைந்த பெண்கள் உள்ள மாவட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டமே முதல் இடம் பிடித்துள்ளது. இந்த மாவட்டத்தில் 90.45 சதவிகிதப் பெண்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர். இந்த ஒரு மாவட்டம்தான் பெண்கள் படிப்பறிவில் 90 சதவிகிதம் பெற்றிருக்கிறது. சென்னை மாவட்டம் 87.16 சதவிகிதத்துடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் 81.77 சதவிகிதத்துடன் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு நான்காம் இடம். இந்த மாவட்டத்தில் 80.17 சதவிகிதப் பெண்கள் படிப்பறிவுகொண்டவர்கள் உள்ளனர். தர்மபுரி மாவட்டம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. இந்த மாவட்டத்தில் 60.03 சதவிகிதப் பெண்களே படிப்பறிவு பெற்றுள்ளனர். 

மற்ற மாவட்டங்களின் விவரம் (பெண்கள்):

 

 

மாவட்டம் தேர்ச்சி விகிதம்
திருவள்ளூர் 66.33
வேலூர் 66.75
கிருஷ்ணகிரி 64.86
திருவண்ணாமலை 65.71
விழுப்புரம் 63.51
சேலம் 65.43
நாமக்கல் 66.68
ஈரோடு 65.07
நீலகிரி 79.44
கோவை 79.16
 திருப்பூர் 72.07
திண்டுக்கல் 66.82
கரூர் 67.07
திருச்சி   77.24
பெரம்பலூர் 66.11
அரியலூர் 62.22
கடலூர் 71.02
நாகப்பட்டினம் 78.00
திருவாரூர்  77.02
தஞ்சை 76.61
புதுக்கோட்டை 69.51
சிவகங்கை 72.33
மதுரை 76.74
தேனி 69.72
விருதுநகர் 73.14
ராமநாதபுரம் 74.93
நெல்லை 76.38

தமிழகத்தில் கடந்த 2001-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு, 2011-ம் ஆண்டுதான் நடத்தப்பட்டது. அதனுடன் ஒப்பிடும்போது தற்போது படிப்பறிவு சதவிகிதம் பெருகியுள்ளது.  தமிழகத்தில் ஆண்களின் படிப்பறிவு சதவிகிதம் நகர்ப்புறத்தில் 91.82 சதவிகிதமும், கிராமப்புறத்தில் 82.08 சதவிகிதமும் இருக்கிறது. பெண்களைப் பொறுத்தவரை நகர்ப்புறத்தில் 82.67, கிராமப்புறத்தில் 65.52 சதவிகிதம் பேர் படிப்பறிவு கொண்டவர்கள். இதில் முதல் இடத்தில் இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 413 தொடக்கப் பள்ளிகளும், 147 நடுநிலைப் பள்ளிகளும் , 121 உயர்நிலைப் பள்ளிகளும் , 120 மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close